Location | curriculum | Timing
கொங்கு சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான போட்டி   (30-Nov-2017)

கோபி, நவ. 30 கோபி பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் பள்ளி மாணவிகள் நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். கொங்கு சகோதயா பள்ளிகளுக்கு இடையே பல்வேறு பிரிவு மாணவிகளுக்கான நீச்சல் போட்டி கரூர் இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து மாணவிகள் பங்கேற்றனர். நீச்சல் போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோபி பாரதி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ரித்தன்யா பேக்ஸ்ட்ரோக் போட்டியில் 2 வது இடத்தை பெற்றார். 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இதே பள்ளியல் 8 ம் வகுப்பு பயிலும் மாணவி கே.எம்.ரித்திகா பேக்ஸ்ட்ரோக் போட்டியில் 2 வது இடத்தை பெற்றார். தேசிய கிராமிய விளையாட்டு தேசிய அளவில் யோகா போட்டிகள் கய்னானா மணி கல்வி நிறுவனத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் 10 வயதுக்குட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் கோபி பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் ஹரிபிரனேவ், 14 வயதுக்குட்பட்டோர் மாணவியர்கள் பிரிவில் மாணவி பிரியாமாலா ஆகியோர் முதல் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றனர். மேலும், இங்கு நடைபெற்ற மாணவிகளுக்கான இரட்டையர் பேட்மிட்டன் போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆர்.அர்ச்சிதா, அஸ்வன்திகா ஆகியோர் முதல் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளை பள்ளி தாளாளரும் முதல்வருமான பி.ஆர்.வேலுமணி பாராட்டி பதக்கங்களை வழங்கினார். மாணவிகளை பள்ளி நிர்வாக அதிகாரி அமுதம், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பாராட்டினர்.